கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு


மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் உடைந்த தளபாடங்களை மீள் சுழற்சி மூலம் இலவசமாகத் திருத்திக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தினர் மற்றும் விவேகானந்தா பாடசாலை அதிபர் திருமதி பிரபாஹரி இராஜகோபாலசிங்கம் உட்பட ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருத்தப்பட்ட தளபாடங்கள் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் தலைவரினால் பாடசாலை அதிபரிடம் கையளிப்புச் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளைத் தெரிவு செய்து அங்குள்ள உடைந்த தளபாடங்கள் மீள்சுழற்சி முறையில் திருத்தி கையளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இக் கம்பனியினால் இவ்வாறான பணி மேற்கொள்ளப்படும் 40வது பாடசாலையாக கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர் தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.