புனித திருத்தல பாத யாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது
கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த புனித திருத்தல பாத யாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது

இலங்கை நாட்டில் சாந்தி சமாதனம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திருத்தல பாத யாத்திரை குழுவினர் நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தது . 

மட்டக்களப்பை வந்தடைந்த திருத்தல பாத யாத்திரை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் திருத்தல பாத யாத்திரை குழுவினர் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை சென்றடந்ததுடன் அங்கு இடம்பெற்ற பஜனை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து இன்று மாலை கதிர்காமத்தை நோக்கி பயணிக்கவுள்ளனர் 

இந்த புனித திருத்தல பாத யாத்திரை குழுவினர் கதிர்காமம் முருகன் ஆலயத்தினை சென்றடைந்ததும் ஆலய உற்சவத்தில் கலந்து சிறப்பிப்பதுடன் தமது திருத்தல பாத யாத்திரையினை நிறைவு செய்யவுள்ளனர் .