பெரியகல்லாற்றில் வெடி குண்டு செயலிழப்பு



பெரியகல்லாறு கடற்கரை பிரதேசத்தில் குண்டு செயலிழக்கும்பிரிவினர் குண்டொன்றை செயலிழக்கச் செய்ததினால் ஏற்பட்டபெரும் சத்தத்தினால் பொதுமக்கள் பரபரப்படைந்துபதறியடித்துக் கொண்டு கிராமத்திலுள்ள பாடசாலைகளைநோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

இன்று (07) காலை 10.15 மணியளவில் இந்த குண்டு வெடிப்புசத்தம் கேட்டதனால் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளை படிக்கும்பாடசாலையில்தான் குண்டு வெடிப்பு நடந்தவிட்டதோ என்றபதற்றத்துடன் கிராமத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் ஓடிச்சென்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் தாக்கத்திலிருந்துஇன்னமும் விடுபடாத நிலையில் பாடசாலை நேரத்தில் குண்டுசெயலிழக்கச் செய்ததானது பாடசாலையில்தான் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவிட்டதோ என்ற சந்தேகத்தில் தங்கள்பின்ளைக்கு என்ன நடந்தததோ தெரியாது என்பதை அறியும்நோக்குடனேயே பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

இதனால் அவர்கள் குறுகிய நேரம் உள தாக்கத்திற்கும்உள்ளானார்கள்.; வீட்டில் வேலை செய்தபடியே ஓடி வந்ததால்அசௌகரியங்களுக்கும் ஆளானார்கள். இனிமேல் எமதுகிராமத்தில் குண்டு செயலிழக்கச் செய்வதானால் பாடசாலை

நேரம் தவிர்த்து செய்வதே பொருத்தமாக இருக்கும் எனவும்அல்லது முற்கூட்டியே போதிய அவகாசத்துடன் முன் அறிவித்தல்கொடுத்துச் செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வதந்திகள் பரவுவதையும்தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.

குண்டு செலிழக்கும் பிரிவினர் மத்திய கல்லூரி அதிபரிடம்குண்டு செயலிழப்பிற்குச் சற்று முன்னர் குணடுசெயலிழப்புஒன்று இடம் பெறவிருப்பதாக நேரில் தெரிவித்ததால் பாடசாலைஆசிரியர்களோ அல்லது மாணவாகளோ பதற்றம்அடையவில்லை என அதிபர் சி.பேரின்;பராஜா தெரிவித்தார்.

அதேவேளை சிறிய பாடசாலைகளில் மாணவர்கள் சிலர் பாரியசத்தம் கேட்டு பயந்து வகுப்பறையில் சிறுநீர் கழித்ததாகவும்தெரிவிக்கப்படுகின்றது. . 

பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியுடன் வருகை தந்த பொலிஸ் குழுவினர்பொதுமக்களை நட்புரீதியாகச் சமாதானப்படுத்தி வீடுகளுக்குஅனுப்பி வைத்தனர்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மண்முனை தென் எருவில்பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் கணேசநாதன். மற்றும்பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கங்காதரன் மற்றும்பெற்றோர் ஆகியோர் திடீரென எற்பட்ட சத்தத்தினால் மக்கள்நிலைகுலைய வேண்டி ஏற்பட நேர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் பெரியகல்லாறு பாடசாலைகள்அனைத்தும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் மூடப்பட்டுமாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படடனர். இருவாரங்களுக்கு முன்னரும் இத்தகையகுண்டு செயலிழப்பு இங்கு நடைபெற்றதும்குறிப்பிடத்தக்கது.