உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டல் ஆறு வாரங்களுக்குப் பின்னர் நாளை திறப்புஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டலானது நாளை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், ஆறு வாரங்கள் கழித்து குறித்த ஹோட்டல் திறக்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது.

எனினும், ஜூன் 15ஆம் திகதியன்றே ஹோட்டல் அறைகளைப் பயன்படுத்த முடியுமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.