கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் தீ( எரிக் )
மட்டக்களப்பில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு அருகில் உள்ள ஐஸ் தொழிற்சாலையில் நேற்று  மாலை ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சொந்தமான ஐஸ் தொழிற்சாலையிலேயே இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஐஸ் தொழிற்சாலை நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதி காடுகள் மண்டி காணப்பட்ட நிலையில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.இதன்போது குறித்த கட்டிடத்தில் இருந்த கூரைப்பகுதிகள் மற்றும் பழைய பொருட்கள் தீயில் எரிந்திருப்பதை காணமுடிந்தது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.