இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம்

தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம் கடந்த முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.குணநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இந்து சமயத்தின் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக முழுவதும் அனு~;ட்டிக்கப்படுகின்றது உண்மையிலே பூரணத்துவமான ஆளுமைப்பண்புக்கு அடிப்படையாக திகழ்வது அறநெறிக்கல்வியே கடந்த ஆண்டு இக்கொடிவாரத்தினால் கிடைக்கப்பட்ட ரூபாய் 5997663 நிதியினுடாக பலதரப்பட்ட அறநெறி செயற்பாட்டை செய்துவந்தாகவும் 17 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது அத்தோடு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என சகலவிதமான உதவிகளையும் இதனுடாக ஆற்ற முடிந்துள்ளது

இவ்வாறு அறநெறிசெயற்பாடுகளை ஊக்குவிக்கும் பல காத்திரமான செயற்பாடுகள் கொடிவாரத்திற்கு சேகரிக்கப்பட்ட நிதியினைக்கொண்டு இந்து பண்பாட்டு நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.மனப்பூர்வமான ஒத்துளைப்பு வழங்கி,இளம் இந்துச்சிறார்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுத்த அனைவருக்கும் இந்து சமய அறநெறிக்கல்வி இந்துப்பண்பாட்டு நிதியம் பாராட்டுகிறது.