பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவுக் குழுவினால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.