கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தி.கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு  கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் சித்தி.

கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு  கல்முந்தல்; திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இருந்து ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்கையில், வெட்டுப் புள்ளிக்குமேல் 12 மாணவர்கள் சித்திபெற்று பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருப்பதாக பாடசாலை அதிபர் க.செல்வராசா தெரிவித்தார்.

சித்திபெற்ற மாணவர்களான (முன்வரிசையில்) சுவர்ணராஜன் அட்ஷயன் (184), சுகுணதாஸ் சுயஷ்டி (170), ரமேஷ்வரன் வஜிஸ்ரினா (168), ராஜீ அபிகிஷாந் (166), ரவீந்திரன் ஜஷானா (161), தேவநாயகம் செஷாந் (160), தவேந்திரன் பிருந்திகா (158), ஆகியோரையும்,

இரண்டாம் வரிசையில், ஜெயகுமார் டர்ணித் (155), வரகுணன் வதுர்மிகா (154), சுபராஜ் தர்ஷிகன் (152) சிறிதரன் பிரித்தியக்ஷன் (152), கோகிலன் பிருத்திகா (152). ஆகியோருடன்

முன்றாவது வரிசையில் அதிபர் க.செல்வராசா, பிரதி அதிபர் பூ.அரசரெத்தினம், கற்பித்த ஆசிரியைகளான திருமதி ப.வேதநாயகம், திருமதி கு.பதிவரதன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.