ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், 10 பேர் சுயேச்கை வேட்பாளர்களாகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.