பெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்

பெண் ஒருவருக்கு அதிஸ் ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்ற ஒருவருக்க 14 விளக்கமறியல்

குளிர்பான சோடா கம்பனி ஒன்றில் அதிஸ்ட சீட்டிழுப்பில் 5 ஆயிரம் அமெரிக்க டொலர் பணம் கிடைத்துள்ளதாக கூறி   பெண் ஒருவரிடம் 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடிய பெற்ற பொகலந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டர்.

கடந்த ஏப்பிரல் மாதம் மட்டக்களப்பு மாமாங்க பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கையடக்க தொலைபேசியில் பிரபல குளிர்பான சோடா கம்பனி ஒன்றில் இருந்து பேசுவதாக தெரிவித்து உங்களுக்கு சோடா கம்பனியின் அதிஸ்ட  சீட்டிழுப்பில் 5 ஆயிரம் அமெரிக்க டொலர் பணம் வீழ்ந்துள்ளது.

எனவே அதனை உங்களுக்கு பெற்றுத்தர முதலில் எனது வங்கி கணக்கிற்கு 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து குறித்த பெண்ணும் அதிஸ்டம் கிடைத்துள்ள பிரம்மிப்பில்  குறித்த  நபரின் வங்கிக்கு பணத்தை வைப்பிலுட்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த பெண் தன்னை ஏமாற்றி மோசடியாக பணத்தை பெற்றுக் கொண்டுள்ளர் என தெரியவந்ததையடுத்து உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தனக்கு நோர்ந்த கதி தொடர்பாக தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார் .

இதனையடுத்து பொலிசார் குறித்த கணக்கு வங்கி யாருடையது என கண்டுபிடித்த போது அவர் பொகலந்தலாவையைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் ஒரு தொழிலும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்ததையடுத்து குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 25 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.