மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி  சாந்தினி  தலைமையில் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது  .

இன்று  நடைபெற்ற  வருடாந்த கல்லூரியின் பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகான கல்விப்பணிப்பாளர் எம் .கே எம் .மன்சூர் , சிறப்பு விருந்தினராக  வலயக் கல்விப்பணிப்பாளர் வி .மயில்வாகனம் மற்றும்  அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பழையமாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.