வெல்லப்போவது கோத்தபாயாவா அல்லது சஜித்தா ? தற்போதைய களநிலவரம்

ஆர்.சயனொளிபவன் & TEAM 
  • ஜனாதிபதி தேர்தலில் சரித்திரம் படைத்த சுதந்திர கட்சி கீழ் .....
  • தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு 
  • பொதுஜன பெரமுனையவின் வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ச
  • ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச
  • தற்போதைய களநிலவரம்களின் படி 

நாட்டின்  8வது ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் கடந்த 7ம் திகதி பூர்த்தி பெற்றதை தொடர்ந்து தேர்தலில் களமிறங்கும் முக்கிய கட்சிகளின் போட்டியாளர்களான முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன பேரமுனையின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்கள் நேற்றையதினம் தமது தேர்தல் பிரசாரத்தை சிங்கள மக்களின் புராதன நகரமான அனுராதபுரத்திலும் , ஐக்கிய தேசிய முன்னணியின்  ஜனாதிபதி  வேட்பாளர்  அமைச்சர் சஜித் பிரேமதாசா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று காலிமுக திடலிலும் ஆரம்பித்து  மக்களின் மனதில் இடம்பிடிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியும்    உள்ளனர். இத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 35 என்றும் இவர்களில் 30 பேர் பெருன்பான்மை சமுகத்தை சேர்ந்தவர்களாகவும்   , 02 பேர் தமிழர்களாகவும்   03 பேர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.


ஜனாதிபதி தேர்தலில் சரித்திரம் படைத்த சுதந்திர கட்சி மிகவும்  கீழ் நிலையில்
35 வருட ஜனாதிபதி தேர்தல் சரித்திரத்திலேயே மிகவும் சிறந்த அடைவு  மட்டத்திணை பெற்ற  சுதந்திர கட்சியானது தற்போது நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலிலே தமது கட்சி சார்பாக வேட்பாளரை  களமிறக்காததும்  ஒரு முக்கிய விடயமா கருதப்படுகின்றது .  இதுவரை நாட்டில்  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில்  5 முறைகள்  சுதந்திர  கட்சியை சேர்ந்தவர்களே   வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றியும் அடைந்துள்ளனர். அந்த வகையில்   முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்கா இரு முறையும்  மஹிந்த ராஜபக்ச  இருமுறையும்  என வெற்றி பெற்றதோடு மற்றும் வது  முறையாக  சுதந்திர கட்சியை சேர்ந்த  ஜனாதிபதி மைத்திரிபால  ஒரு முறை என  இக் கட்சியை சேர்ந்தவர்களே இதுவரை இறுதியாக நடைபெற்ற 5 ஜனாதிபதி தேர்தல்களிலும் வெற்றி பெற்று சிறந்த சாதனையையும்   படைத்துள்ளனர் .

ஜனாதிபதி மைத்திரியின் முடிவெடுக்கும் தன்மையில் உள்ள தளம்பல், மற்றும் தான் எப்படியாவது இம் முறை நடைபெறும் 8வது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவேண்டும் என தனக்குள்ளேயே இருந்த விருப்பம் மேலும் அந்த வகையில் அவர் தமது முயற்சியை வேட்புமனு தாக்கல் செய்யும்  இறுதி நாளான  இம்  மாதம் 7ம் திகதி வரை  ஏதோ ஒரு வகையில் தொடர்ந்ததும்  . அதிலும் குறிப்பாக அவரது பதவிக்காலத்தின் இறுதி ஒருவருட காலப்பகுதியில்  தான் ஒன்றில்  ஜனாதிபதியாகவோ  அல்லது குறைந்தபட்சம்  பிரதமராகவோ    வரவேண்டும் என்பதிலிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தினாரே  தவிர தான் ஜனாதிபதியாக  இருக்கும் இந்த நாட்டையோ அல்லது தான் தலைமை தாங்கும்  சுதந்திர கட்சியையோ பற்றி சிறிதளவேணும்  சிந்திக்கவே இல்லை என்பதுதான் உண்மை . மேலும் இவருடைய சுயநல சிந்தனையே எமது நாட்டினதும்  மற்றும்  சுதந்திர  கட்சியின் இன்றைய  நிலைக்கும்  காரணமாகும்.


மேலும் ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தளவில் 30 வருடங்களுக்கு முன்பு 1989 இல்  சஜித் பிரேமதாசாவின்  தந்தையான ரணசிங்கா பிரேமதாஸாவே இறுதியாக வெற்றிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதேபோல்  இவருடைய புதல்வர் சஜித் பிரேமதாச இம் முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் முதல் முறையாக ஜனாதிபதிகளாக இருந்த தந்தையும் மகனும் எனும் சரித்திரத்தையும்  தம்மகப் படுத்திக்கொள்வார்கள்  அத்தோடு இந்த நாட்டில் நடைபெற்ற வது  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு மிக  நீண்ட இடைவெளிக்கு அப்பால் ஐக்கிய தேசிய கட்சி  அடைந்த  வெற்றியாகவும் அமையும்.


தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு 

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு எந்த வேட்பாளருக்கு இருக்கின்றது என்று பார்ப்பதற்கு இதுவரை  எந்தவொரு துல்லியமான கருத்துக்கணிப்பும்  வெளிவராத வகையிலும் இறுதியாக ஜனவரி 2018 இல் நாடளாவிய ரீதியில்  நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலை  ஒரு வகையில் ஒரு மாதிரியாகவும் மற்றும் அத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில்  இருந்து இன்றுவரை நாட்டில் இடம் பெற்ற பாரிய நிகழ்வுகளான 

  • 26 அக்டோபர் 18 இல் நடைபெற்ற ஆட்சி  மாற்றத்திற்கான முயற்சி,
  • இவ் வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு முஸ்லீம் பயங்கரவாத தாக்குதல்கள், 
  • மற்றும்  கடந்த இரு வருடங்களில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நாட்டை முன்னெடுத்து சென்ற விதம் 
  • இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளரை  களத்தில் இறக்காததால் சுதந்திர கட்சியின்  தற்போதைய வாக்கு வங்கியாக கருதப்படும் 15 இலட்சம்   வாக்குகளே வெற்றியாளரை நிர்ணயிக்கும் சக்தியாக  உள்ளதாலும் மேலும் குறிப்பிட்ட இவ் வாக்குவங்கியில்  என்ன விதம் இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையே அளிக்கப்படவுள்ளது என்ற விடயமும் முக்கிய   விடயங்களாக  கருதப்படுகின்றது.                           .

2018 ஜனவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு

              



போன்ற  முக்கிய காரணிகளை  கருத்தில் கொண்டு    இவ் இரு போட்டியாளர்களில் யார் தற்போதைய நிலையில் முன்னனியில் இருக்கின்றனர் என்பதையும் அனுமானிக்கலாம் .


2015 இல்  இடம்பெற்ற 7 வது ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 82% அளவிலான  வாக்குகள்  அளிக்கப்பட்டுள்ளது. 
அந்தவகையில் இம் முறையும் நடைபெறவிருக்கும் தேர்தலிலும்  பெரும் எதிர்பார்ப்பு இருப்பதனால் 83% அல்லது அதற்கு மேலதிகமான அளவு  விகிதமான  மக்கள் வாக்களிக்கலாம்  என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. , அந்த வகையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 1,59,92,000 ஆக உள்ள நிலையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அளிக்கப்பட மொத்த வாக்குகளை விட (3*160,0000 = 480,000) 5 இலட்சம் அளவிலான அதிக்கப்படியான வாக்குகள் இத் தேர்தலில் அளிக்கப்படலாம் என்றும்  எதிர் பார்க்கபடுகின்றது .



இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் மிகவும் விறு விறுப்பான தேர்தலாக இருப்பதற்குரிய  அனைத்து தன்மைகளையும் கொண்டுள்ளதால் .   இத் தேர்தலில் அண்ணளவாக  (1,30,00,000) ஒரு கோடி முப்பது இலட்சம் அளவிலான மக்கள் வாக்களிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றை   எல்லாம் வைத்து பார்க்கும் போது நடைபெறவிருக்கும் வது ஜனாதிபதி தேர்தலின்  வெற்றியாளர் அளிக்கப்படும் வாக்குகளில் குறைந்தது 50% அளவிலான  வாக்குகளை பெறவேண்டியுள்ளதால் (65,00,000) அறுபத்து ஐந்து இலட்சம்  அளவிலான வாக்குகளை பெறவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத் தேர்தலில் மொத்தமாக அளிக்கப்படலாம்  என ஊகிக்கப்படும்  1,30,00,000 வாக்குகளில் சிறுபான்மை மக்களின் வாக்குவங்கியானது , இலங்கையின் மொத்த சனத்தொகையில்   சிறுபான்மை சமூகம் 24%  உள்ளதாலும் இவற்றுள் சிறுபான்மை சமூகத்தின் வாக்களிப்பு விகிதம் அண்ணளவாக  80% ஆகவும்   .  மேலும் இந்தவகையில் பார்க்கும் போது குறிப்பிட்ட இத்  தேர்தலில்  ( 16,00,000*.24*.80 ) = 30,00,000) 30 இலட்சம் அளவிளாக  சிறுபான்மை சமூகத்தினரின்  வாக்கு வங்கி அமையலாம் எனவும் கருதப்படுகிறது .   அதேவேளை மிகுதியாகவுள்ள  1,00,00,000 அளவிலான வாக்குகள்   சிங்கள மக்களினால் அளிக்கப்படலாம் எனவும்  கருதப்படுகின்றது 


பொதுஜன பெரமுனையவின் வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ச 



ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ஷ அவர்கள் தமது கட்சியான பொதுஜன பெரமுனையிற்கு ஜனவரி 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில்  பெற்ற 50,00,000 (50 இலட்சம் ) வாக்கு வங்கியை தமது தளமாக வைத்தே இத் தேர்தலில்  களமிறங்கியுள்ளார். மேலும் இவர்களுடைய தேர்தல் வியூகம்   சிங்கள  மற்றும் சிங்கள அடிப்படைவாதிகளை பெருமளவில் நம்பியதாகவே அமைந்துள்ளது.  இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற இவரது முதலாவது பிரமாண்டமான தேர்தல் அங்குரார்ப்பண கூட்டமும் மேலும் அவர் அவ் நிகழ்வில் நிகழ்த்திய பேச்சும் அமைந்துள்ளது.மற்றும் இத் தேர்தலின்  வெற்றியை நிர்ணயிக்க  கூடியதாக கருதப்படும் 65,00,000 (65 இலட்சம்) அளவிலான வாக்குகளை அடைவதற்கு இவர்களுக்கு மேலும் 15,00,000 அளவிலான வாக்குகள் தேவைப்படுகின்றது.  இத் தொகையை அடைவதற்கான முயற்சிலேயே தற்போது ராஜபக்சவினர் தமது முழு  காய் நகர்த்தல்களை மேற்கொள்ளுகின்றனர். அந்தவகையில் 

  • அளிக்கப்படவுள்ள மொத்த வாக்குகளில் சிங்கள மக்களின் வாக்குவங்கியான 1,00,00,000 இல் இவர்களுடைய அணியானது 60% (60,00,000) அதாவது 60 இலட்சம் அளவிலான வாக்குவங்கியை தம் வச படுத்த வேண்டிய கட்டாயத்திலும்  உள்ளனர். 
  • இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்காத ஜனாதிபதி  மைத்திரியின் சுதந்திர கட்சியின் வாக்கு வங்கியாக கருதப்படும்  15 இலட்சம் அளவிலான வாக்குகளில் அதிகூடிய விகிதத்தை தம்வசம் படுத்தும் முயற்சியில் வெற்றிகரமான முறையில் முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர் .  அந்தவகையில் இன்று ஒட்டு மொத்த  சுதந்திர கட்சியின்   பிரமுகர்கள் ராஜபக்ச அணியுடன் இணைந்துள்ளனர்.  
  • மேலும் சிறுபான்மை சமூகத்தின்  மாற்று தலைமைகளில் உள்ள  அனைத்து தலைமையையும்   தம்வசம் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்  அந்தவையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி போன்றோரை இதுவரை இணைத்த வகையில்   தமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  • 2018 உள்ளுராட்சி தேர்தலின் பின்பு இடம்பெற்ற பாரிய சம்பவங்களில் தமக்கு சாதமாக உள்ள உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கத்தில் ஜனாதிபதியிற்கும் பிரதமருக்கும் இடையேயான அதிகார போரின் விளைவாக நாடோ முடங்கிய நிலையில் உள்ள தன்மையையும் மக்களுக்கு  எடுத்துச்  செல்லும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்   .  
  • குறிப்பாக இத்  தேர்தலில் மேலதிகமாக அளிக்கப்படவுள்ளதாக கருதப்படும்  இலட்சம் அளவிலான வாக்குகளையும்  கவரக்கூடிய வகையில் தமது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது .
இச் செயற்பாடுகளின் மூலம்  மேலதிகமாக  தமக்கு தேவைப்படும் 15 இலட்சம் வாக்குகளையும்  அடைய முற்படுகின்றனர் என்றும் அனுமானிக்கப்படுகின்றது.



ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 

 ஜனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில்    வெற்றி இலக்காக கருதப்படும் 65 இலட்சம் வாக்குகளை அடைவதற்கு அவர் பல சவால்களை வெற்றிகரமாக கடக்கவேண்டிய நிலையிலேயே  உள்ளார் . மேலும்   அவரை பொறுத்தளவில்  2015 ஜனவரியில் இடம்பெற்ற  உள்ளூராட்சி  தேர்தலில்  ஐக்கிய தேசிய முன்னனி  பெற்ற 36 இலட்சம் வாக்குகளை அடிப்படையாக வைத்து வெற்றிக்கான முயற்சியில்   இறங்கும் போது  மேலும் 25 இல்  இருந்து 30  இலட்சம் அளவிலான வாக்குகளை பெறவேண்டிய நிலையிலேயே உள்ளார். மேலும் 65 இலட்சம் அளவிலான வாக்குவங்கியை தம்வசப்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளார் .
 அந்தவகையில்:
  • அளிக்கப்படவுள்ள மொத்த வாக்குகளில் சிங்கள மக்களின் வாக்குவங்கியான 1,00,00,000 இல் இவர்களுடைய அணியானது 40% (40,00,000) அதாவது 40 இலட்சம்   அளவிலான வாக்குவங்கியை தம் வச படுத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
  • வேட்பாளர் சஜித்   சிறுபான்மை சமூகத்தின் பெரும் ஆதரவை  கொண்டுள்ளதாகவும் மேலும் சிறுபான்மை சமூகத்தின்   30 இலட்சம் அளவிலான   வாக்கு வங்கியில்  அதி கூடுதலான அளவு வாக்குகளை பெறுவதன் மூலமே இவருடைய வெற்றியும்  தங்கியுள்ளது என்றும் கருதப்படுகின்றது 
  • ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி  காலமான கடந்த ஐந்து  வருடங்களில் பல பின்னடைவுகளை அடைந்தாலும் அவற்றிற்கு உரிய பொறுப்பில் அக் கட்சியின் தலைவரான  பிரதமர் ரணிலே உள்ளார் என்றும்   கருதப்படுகின்றது மேலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பொறுத்தளவில் தான் கடந்த வருடங்களாக அமைச்சராக இருந்து பாமர மக்களுக்கு ஆற்றிய சேவை,  மற்றும் தமது புதிய இளம்  தலைமைத்துவம் என்பன தமது கட்சியின் வாக்குவங்கியை பாரிய அளவில் உயர்த்தும் என்ற நம்பிக்கையிலிலேயே தமது பிரசாரத்தை மேற்கொள்ளுகின்றனர்'
மேலும் வேட்பாளர் சஜித்தை பொறுத்தளவில் ஆளும் கட்சியின் வேட்பாளர் என்பதாலும் கடந்த 4-5 வருடங்களில் இவர்கள் மக்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததினாலும் இவருடைய பிரசாரம் வருகின்ற 5 வாரங்களில் எவ்வாறு  அடிமட்ட சிங்கள மக்களின் நம்பிக்கையை பெறவுள்ளது என்பதை பொறுத்தே இவர் வெற்றி  வாய்ப்புகளுக்கான  சர்ந்தர்ப்பம்களும் அமையவுள்ளது.




தற்போதைய களநிலவரங்களின் படி

தற்போதைய நிலவரங்களின் படி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முன்னிலையில் இருப்பதாக கருதப்படும் இவ் வேளையில் அவரது வெற்றியானது சுதந்திர கட்சியின் 15 இலட்சம் வாக்கு வங்கியில் 75% விகிதத்திற்கு அதிகமான வாக்குகளை தம் வசம் படுத்துவதில்லேயே  தங்கியுள்ளது.

வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை பொறுத்தளவில் அவரது வெற்றியானது   ஒரு நீண்ட பயணமாக அமையவுள்ளது அவர் மேலும் குறைத்தது 40 % அளவிலான சிங்கள மக்களின்    நம்பிக்கையை பெற  வேண்டிய கட்டாயத்திலும்  , சிறுபான்மை மக்களின் மிக கூடுதலான வாக்குவங்கியை தம்வசப்படுத்தவேண்டிய  நிலையிலும்,  இத் தேர்தலில் மேலதிக அளிக்கப்படவுள்ளது என கருதப்படும்  இலட்சம் வாக்காளர்களில் அதிகமான விகிதத்தினரை  தம்வசப்படுத்த வேண்டிய நிலையிலும்   மேலும் இறுதியாக  சுதந்திர கட்சியின் வாக்கு வங்கியில் ஒரு 20% ஆவது  தம் வசப்படுத்துவதன் மூலமும்  தான் இவருடைய வெற்றிவாய்பு தங்கியுள்ளது.


இந்த நாட்டில் உள்ள  மக்களை  பொறுத்த அளவில் சுதந்திரத்திற்கு பின்பு உலகில் உள்ள ஏனைய  நாடுகள்  பார்க்காத அளவு இயற்கை அழிவுகளையும்  மனித குலத்தால் ஏற்படுத்தப்பட்ட பாரிய உயிர்  அழிவுகளையும் மற்றும் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள்  அதிகாரத்தை தொடர்ச்சியாக தம்வசம் வைத்துக்கொள்வதற்கான இழுபறி நிலையையும்  தான் பார்த்துள்ளனர் . இனி வரும் ஆட்சியாளர்களாவது  இதயசுத்தியுடன் நாட்டில் உள்ள சகல இன மக்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவரக்கூடிய வகையிலும்  நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும்  மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும்  நீண்ட சமாதானம், பாதுகாப்பு, நாடளாவிய ரீதியில் நிலையான பொருளாதார வளர்ச்சி, உறுதியான ஜனநாயகமும் நீதி துறையும் மற்றும் ஊழல் அற்ற அரச  சேவையையும்  நாட்டில் உள்ள  அனைத்து  மக்களுக்கும்  வழங்க கூடிய ஒரு ஜனாதிபதியையே நாட்டின் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் . 

ஆர்.சயனொளிபவன் & TEAM 
BATTINEWS.COM