கிழக்கில் பிரபலமாகும் அலைச்சறுக்கலும் - மேலும் பல சுற்றுலா நடவடிக்கைகளும்

[NR] 

கிழக்கில் பிரபலமாகும் அலைச்சறுக்கல் - மேலும் பல சுற்றுலா நடவடிக்கைகள்

ஆஸ்திரேலியாவின் பிரபல அலைச்சறுக்கல் வீரரின் விஜயம் கிழக்கில் சுற்றுலாத்துறையின் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியது
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்த அறுகம்பை வாழ் மக்களின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும ; நிகழ்வொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. உலக அரங்கில் இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள நிலைநிறுத்தும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இடம்பெற்ற, World Surf League - WSL (உலக அலைச்சறுக்கல் லீக்) இன்So Sri Lanka Pro 2019 Qualifying Series (QS)
3000 தகுதிகாண் தொடரே அந்த நிகழ்வாகும். உலகெங்கிலிருந்தும் வருகை தந்த 120 க்கும்  மேற்பட்ட அலைச்சறுக்கல் வீரர்கள் பங்குகொண்ட இந்நிகழ்வு, கிழக்கில் சுற்றுலாத்துறை தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பல்வேறு தரப்பினருக்கும் வரப் பிரசாதமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கென ஆஸ்திரேலியாவின் பிரபல அலைச்சறுக்கல் வீரர்  மற்றும் 1999 ஆண்டில் உலக சாம்பியனான மார்க் “Occy” ஒச்சிலுபோ இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை விசேட அம்சமாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக அலைச்சறுக்கல் போட்டித் தொடர்களில் கலந்து கொள்ளாதிருந்த Occy இன் வருகை, சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. Market Development Facility (MDF) மற்றும் Skills for Inclusive Growth (S4IG)ஆகியவற்றின் வாயிலாக இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை ஊக்குவிப்பதையும் ஒரு நோக்கமாக கொண்ட இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயமானது, ஒச்சிலுபோவின் இலங்கை விஜயத்திற்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு சில போட்டி நிகழ்வுகளில் மாத்திரம் பங்கெடுத்த Occy கிழக்கில் உள் ள பலவிதமான சுற்றுலா நடவடிக்கைகளை அனுபவிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டமையானது அப்பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையின் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியது.

குமண வனவிலங்கு சவாரி

முதலாவதாக குமண தேசிய பூங்காவுக்கு விஜயம் செய்த Occy, அதன் இயற்கை வனப்பால் பெரிதும் கவரப்பட்டார் . பறவைகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர் க்கமாகக் கருதப்படும் குமண தேசிய பூங்காவானது, யானைகளுக்கு மட்டுமல்லாது, இலங்கைச் சிறுத்தை மற்றும் கரடி ஆகிய அரிய வகை விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கிறது.

வனவிலங்கு சவாரி தொடர்பில் Occy, கருத்துத் தெரிவிக்கையில், “இது உண்மையிலேயே எனக்கொரு நம்பமுடியாத அனுபவமாகும்! ஆர்ப்பரிக்கும் அலைகள், இன்முகத்துடன் வரவேற்கும் மக்கள் என இலங்கைத்

தீவின் அழகு என்னைப் பரவசமடையச் செய்கிறது." என்றார்.

பிரத்தியேகமான சமூகம்  வழிநடத்தும் சுற்றுலா அனுபவங்கள்

கிழக்குப் பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள், பெரும்பாலும் சமூக ஈடுபாட்டுடனானதாகும். இவை தனியார், மாகாண அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் முன்னெடுக்கும்


திறன் அபிவிருத் தித் திட்டங்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. கிழக்குப் பிராந்தியத்திற்கு வருகை தரும்சுற்றுலாப் பயணிகள், உள்ளுர் உணவு வகைகளைத் தயாரித்தல், கிராமிய உணவு வகைகளை சுவைத்தல் அல்லது கிராமியச் சூழலில் அமைந்துள்ள வீட்டு தங்குமிடங்களில் தங்கி இலங்கையின் விருந்தோம்பலில் திளைத்தல் போன்ற பிரத்தியேகமான சுற்றுலா அனுபவங்களைப்  பெற முடிகிறது. இது தவிர, சைக்கிள் ஓட்டுதல், பொத்துவில் மற்றும் ஊரணி களப்புப் பகுதிகளில் படகு சவாரி மேற்கொள்ளல் போன்ற சாகச நடவடிக்கைகளிலும் ஈடுபட முடிகிறது. அப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அனுபவம்  வாய்ந்த சுற்றுலா வழிகாட்டிகளாக உருவாகி வருவதால், நகரத்தைச் சுற்றிப் பார்பதற்கு இலகுவாக பயணிக்க கூடிய பயண முறையாக முச்சக்கர வண்டி சுற்றுப்பயண முறை பிரபல்யமடைந்து வருகிறது. முச்சக்கர வண்டி சவாரி மேற்கொண்ட ழுஉஉலஇ திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பெண்கள் குழுவினர் சமைத்த அரிசிச் சோறு மற்றும் வழக்கத்தை விடவும் காரம் குறைவான கறி வகைகளையும் சுவைக்கத் தவறவில்லை.




தலை தூக்கும் அலைச்சறுக்கல்

அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்  எந்தவொரு நபரும், தமது திறண் மட்டங்கள் பற்றிய அச்சமின்றி கட்டாயமாக அலைச்சறுக்கல் விளையாட்டை அவர்களது சுற்றுலா நடவடிக்கைகளில் சேர்த்துக்
கொள்ள வேண்டும். அப்பகுதியில் உள்ள அலைச்சறுக்கல் கழகங்களின் (Surf Clubs), சர்வதேச அலைச்சறுக்கல் சம்மேளனத்தின் (International Surf Association - ISA) அங்கீகாரம் பெற்ற பயிற்றுனர்கள், அலைச்சறுக்கல் தொடர்பான ஆரம்ப கட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவுள்ளனர்.


அறுகம்பை பகுதியில் உள்ள சில அலைச்சறுக்கல் கழகங்களுக்கு விஜயம்  செய்த Occy, அங்குள்ள இளம் அலைச்சறுக்கல் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

இது தொடர்பில், இலங்கையில் பெண் அலைச்சறுக்கல் வீராங்கனைகளுக்கான ஒரேயொரு கழகத்தின் தலைவியான ஷாமலி சஞ்சய கருத்துத் தெரிவிக்கையில், “எமது கழகத்தைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளும்  Occy, ஐ நேரில் சந்திக்கக் கிடைத்த இந்த வாய்ப்பையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! முன்னாள் உலக சாம்பியனுடன் ஒன்றாக அலைச்சறுக்கலில் ஈடுபடமுடியுமென நாம் கனவிலும் நினைத்திருக்கவில்லை!” என்றார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியினை சந்தித்திருந்த போதிலும், குறிப்பாக கிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறை தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பல்வேறு மட்டத்தினரும் தொழில் ரீதியாக பாதிக்கபபட்டிருந்தனர். எனினும், So Sri Lanka Pro 2019 போன்ற சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மார்க் ஒச்சிலுபோ போன்ற பிரபலங்களின் வருகையானது, இலங்கையில் கிடைக்கக் கூடிய சுற்றுலா அனுபவங்களையும் 2019 ஆம்  ஆண்டுக்கான Lonely Planet இன் முதல்தர சுற்றுலாத் தளமாக இலங்கை ஏன் தெரிவு செய்யப்பட்டதென்பதையும் சர்வதேசத்திற்கு நினைவுறுத்துகின்றது.