தனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தையை இம் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று  உத்தரவிட்டார்.

ஆறாம்கட்டை,கப்பல்துறை,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி கொழும்புக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே மனைவியின் முதல் திருமணத்தின் போது கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதை
அயல் வீட்டுக்காரர் கண்டதையடுத்து பொலிஸ் அவசர பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(எப்.முபாரக்)