மட்டக்களப்பில் மகளீர்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மகளீரை உதைப்பந்தாட்டத்துறையில் வளர்ச்சிகான செய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் வேண்டுகோளுக்கமைய புலம்பெயர்தோருக்கான  சர்வதேச அமைப்பான ஜ.ஒ.எம் நிறுவனம் கனடா நாட்டு நிதி உதவியின் விசேட திட்டங்களை அமுல்படுத்த முன்வந்துள்ளது.




மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகி மாணிக்கம் உதயகுமார் கொடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த விசேட திட்டம் அமுல்படுத்தவுள்ளது.இத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் உதைகப்பந்தாட்ட விளையாட்டு துறையிலே வளர்த்தேடுக்கவும் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் ,சத்துணவு வசதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கையில் அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மகளீர்கான உதைப்பந்தாட்ட திறனை வளர்க்கும் மகளீர்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று  17 இடம்பெற்றது.இந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை மட்டக்களப்பு பிரதிபொலிஸ்மா அதிபர் அயச கருணாரத்தின ,மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.


இந்த ஆரம்ப சுற்றுப்போட்டியில் பன்சேனை விளையாட்டு கழக மகளீர் அணியும் அம்பிலாந்துறை மகளீர் அணியும் மோதிக்கொண்டதில் பாரி பன்சேனை விளையாட்டு கழக அணி 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி ஈட்டிக்கொண்டது. தன்னாமுனை வளநார் மகளீர் அணியும் முனைக்காடு மகளீர் அணியும் மோதிக்கொண்டதில் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி ஈட்டிக்கொண்டது.