பிரசாரம் இன்று ஆரம்பம்; தேர்தல் முடியும் வரை ஊர்வலங்கள் தடை


ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொலிஸ் அனுமதி அவசியம்

வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதற்கமைய, இன்று (07) முதல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை வீதிப் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்தாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறான வீதிப் பேரணிகளை தடுக்கவும், அவ்வாறான சம்பவங்களை வீடியோ செய்து நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பொலிஸாரின் உரிய அனுமதி இன்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (07) ஆரம்பமானதைத் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரத்தை ஒழுக்கமாகவும், அமைதியாகவும் நடத்துமாறு கேட்டுக்கொள்வதாக, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு - பப்ரல் (PAFFREL) நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி தெரிவித்தார்.