மட்டக்களப்பில் 11 விபச்சார விடுதிகள் ! 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிறியதந்தை, ஆசிரியர் , தரகர் உட்பட இருவர் கைது !

- சரவணன்--

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட  சிறுமியின் சிறிய தந்தையர் மற்றும் தரகர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான்; நேற்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள  கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து புதன்கிழமை (06)இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு லபகரமாக பேசி விபச்சார தரகரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்துள்ளதாகவும் அவரை சிறிய தந்தையார் பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொண்டதுடன் சிறுமியை அவரது வீட்டில் கைது செய்யும்வரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும்

விபச்சார தரகர் மற்றும் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் இந்த பாலியல் துஸ்பிரயோக விபச்சார நடவடிக்கையில் இந்த சிறுமியை ஈடுபடுத்தியுள்ளதாகவும்;. இந்த விபச்சாரத்திற்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும். மட்டக்களப்பு மாவட்டத்தில்; 11 விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் தலைநகரில் இரண்டு விபச்சார விடுதிகள்  இயங்கி வருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இச் சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தையார், மற்றும் 35 ம் கொலனி வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட  ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக  பொலிசார் தெரிவித்தனர்.  
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்