அங்கஜன், வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமனம்அங்கஜன், வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(புதன்கிழமை) இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும், யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.