விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

மட்டக்களப்பு- களுதாவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த வீதியில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பின்னால், மற்றுமொரு மோட்டர் சைக்கிள் வேகமாக வந்து மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.