நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்புஅரசாங்க கணக்கு குழுவின் கடந்த நிதியாண்டின் நிதி மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

844 அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணக்காய்வாளரின் ஆவணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட 26 விசாரணைகளின் அறிக்கையும் நாளைய நாடாளுமன்ற அமர்வின்போது முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்க கணக்குக் குழுவின் தலைவர் அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.