சுபீட்சத்தை நோக்கிய இலக்கு - தகுதியானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்கும் நடைமுறை


சுபீட்சத்தை நோக்கிய இலக்கு' என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய அரசாங்கம் தகுதியானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்கும் நடைமுறையை ஆரம்பித்துள்ளதாக கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

ஆற்றலுடைய தகுதியானவர்கள் மாத்திரம் அரச நிறுவனங்களில் ஈடுபடுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரச செலவில் 25 சதவீதம் வீண்விரயமாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு தராதரம் பாராது தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிறைவேற்ற முடியாத பலவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய உன்னதமான சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதித் தேர்தலை சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.