சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்


(LEON)
2019 ஆண்டுக்கான கல்வி பொது  தராதர சாதாரண பரீட்சை  இன்று  நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றதுஇம்முறை  நாடளாவிய ரீதியில் இப்பரீட்சைக்கு பாடசாலை மட்டத்தில் 04  இலட்சத்து  33 ஆயிரத்தி  50  பாடசாலை  மாணவர்களும்,  02  இலட்சத்து  83 ஆயிரத்தி  958  தனியார் பரீட்சாத்திகளும்  தோற்றியுள்ளனர்.

மொத்தமாக 07  இலட்சத்து  17 ஆயிரத்தி  08  பரீட்சாத்திகள்   2019 ஆண்டுக்கான கல்வி பொது  தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் இப்பரீட்சைக்கு  நாடளாவிய  ரீதியில்  4987  பரீட்சை மத்திய நிலையங்களிலும்  554   இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறுகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு  ஆகிய  05 வலயத்தில் 160   பரீட்சை நிலையங்கலிலும் 14 இணைப்பு பரீட்சை நிலையங்கலிலும் இப் பரீட்சைகள்  நடைபெறுகின்றது.

இப்பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 05  கல்வி வலயத்தில்  10,189  பாடசாலை  மாணவர்களும்,  15,002  தனியார் பரீட்சாத்திகளும்  பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .

மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஆண்டுக்கான கல்வி பொது  தராதர சாதாரண பரீட்சைக்கு   25 191  பரீட்சாத்திகள்  தோற்றுகின்றனர் .
காலநிலை மாற்றத்தின் காரணமாக  நாட்டில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையிலும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை  குறிப்பிடத்தக்கது  .