பிறந்த சிசுவை புதைத்த 19 மற்றும் 20 வயதுடைய கணவனும் மனைவியும் கைது!

(எப்.முபாரக்)
திருகோணமலையில் சிசு ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனபது முன்னிலையில் இன்று(17) குறித்த இருவரையும் ஆஜர்படுத்தியபோதே இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பகுதியில் சிசுவின் உடலொன்று இறந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையிலே
இச் சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் தாய் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். 

இதேவேளை அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். யூனீட்,7,முள்ளிப்பொத்தானை,தம்பலாகாமம் பகுதியைச் சேர்ந்த கணவனும் மனைவியும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் எனத் தெரியவருகின்றது.

சிசு பிரசவத்தின் போது உயிரிழந்ததா? பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளதா? இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.