
மட்டக்களப்பு வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி வலயம் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமை ஆற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆரம்பக்கல்வி அபிவிருத்தி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை அதிகரித்தலில் மிகச்சிறப்பாக பங்காற்றியுள்ளார்.கடந்த காலங்களில் 3 வருடங்கள; மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2019 ல் 413 (14%) மாணவர்கள் தகைமை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவர் கல்வி அபிவிருத்தியுடன் மட்டுமல்லாமல் சமய சமூக விடயங்களிலும் ஈடுபாடு உடையவர; காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், ஆரையம்பதி மத்திஸ்த சபை ஆகியவற்றின் உறுப்பினரும் பாலமுனை மீரா ஜும்மாப் பள்ளிவாயல் மற்றும் மத்ரதுல் றஹ்மானியா ஆகியவற்றின் உப தலைவராகவும் இருந்து தமது ஊரையும் சமூகத்தையும் வழிநடாத்திச் செல்கின்றார்.
இவ்வாறு கல்வி சமய சமூக விடயங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமுகசேவையாளனாகவும் திகழ்ந்து வருகின்றார்
இவர் ஆரம்பக்கல்வி தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக 2011 சிங்கப்பூர் சென்றமை குறிப்பிடத்தக்கது.