இன்று முதல் 46 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றம் கலைப்பு!இன்று முதல் 46 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.


இன்று முதல் சரியாக 46 ஆவது நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இதனை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத்தேர்தல் இன்று முதல் 100 நாட்களுக்கு பின்னர் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.