தாய்ப்பால் கொடுத்து குழந்தைகளை பராமரிப்பதில் இலங்கைக்கு முதலிடம்!


தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை உலகில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுமார் 10 அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள்ல முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த நிலையை அடைய முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறு குழந்தைகளினை கவனிப்பது ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் என மேலும் குறிப்பிட்டார்.