மட்டக்களப்பில் வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது !

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது. செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அன்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்படுள்ளது.

இன்று காலை 06 மணியளவில் இச்சம்பவத்தை  உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலையை அடித்து  உடைத்து வீசியுள்ளவாறு அவதானித்துள்ளனர். அவர்கள் தெரிவிக்கையில்  நேற்றிறவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றளில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர்.

மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்தகாலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர். இப் பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விசக்கிருமிகள் யாராக இருந்தாலம் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமாக வேலையை செய்வதை இத்துடன் நிறுத்தவேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக்குழுவினர் கவலை தெரிவித்தனர்.