கொரோனாவினால் முதல் இலங்கையர் இத்தாலியில் மரணம்

இத்தாலில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார், 70 வயதான குறித்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளாரா என்பது தொடர்பில், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆராய்ந்து வருகிறது. இத்தாலியின் மெஸ்ஸினா நகரிலுள்ள 'கிறிஸ்டோரே' நோயாளர் பராமரிப்பு நிலையத்திலிருந்த (Christoray Nursing Home) நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, , இம்மாத ஆரம்பத்தில் குறித்த நபர் இத்தாலி நாட்டிலேயே அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

46 வயதான, ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.

குறித்த பெண், இத்தாலியின் ப்ரெசியாவில் (Brescia) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண சுகமடைந்து வீடு திரும்பியதாக, மிலானிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.