மதுபானசாலையை உடைத்து ஜந்து இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரபகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு ஜந்து இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 03.04.2020 விடியற்காலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இன்று விடியற்காலை சாஞ்சிமலை ஹட்டன் பிரதான வீதியின் புளியாவத்தை நகரில் உள்ள மதுபாணசாலையின் முன்கதவு திறக்கப்பட்டு இருந்ததை இனங்கண்ட நகரபகுதியை சேர்ந்த நபர் மதுபானசாலையின் உரிமையாளருக்கு அறிவித்ததை அடுத்து உறிமையாளரினால் நோர்வுட் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லையென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.