முல்லைத்தீவில் தலைவிரித்தாட ஆரம்பிக்கும் கொரோனா: 6 கடற்படையினருக்கு தொற்று !

(ஜே.எப்.காமிலா பேகம்)
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (22.05.2020)   அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு  கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றைய தினம் சற்று முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்