அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்தார்: ஆச்சரியத்தில் மக்கள்!

(ஜே.எப்.காமிலா பேகம்)
உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் மீகொட பிரதேசத்தில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 79 வயது நபர் வீடு திரும்பவில்லை.

இந்த தருணத்தில் அதுருகிரிய பகுதியில் அனாதை பிணம் ஒன்றை பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த நபர் வீடு திரும்பாத மீகொட பகுதியை சேர்ந்த வயோதிபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டாரிடம் பொலிஸார் ஒப்படைத்து இறுதி சடங்கும் நடந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த வயோதிபர் வீடு திரும்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.