Brandix நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

(மண்டூர் ஷமி)மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் மேகநாதன் ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இரவு (25) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
குநித்த யுவதி தாழங்குடா பரண்டிக்ஸ் ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரிபவர் என்றும் வழக்கமாக யுவதி நித்திரைசெய்யும் அறைக்குச் சென்றவர் இரவு உணவு உண்பதற்கு வெளியில் வராத நிலையில் யுவதியின் தாய் சென்று பார்த்தவேளை அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்த நிலையில் அறையின் பூக்கல் வழியாக பார்த்த போது யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவ் தற்கொலை தொடர்பில் Battinews.com இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த காத்தான்குடி வடக்கு மரண விசாரணை அதிகாரி ச.கணேஷதாஸ் ,

"தற்கொலைக்கான காரணம் வீட்டாருடன் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாடு என தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ஜீவிதா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவார். இதனால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றனர்"  என கூறினார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் அவர்கள் விசாரணைகளின் பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி தடயவியல் பொலிஸார் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.