மாலைதீவில் சிக்கியிருந்த 170 இலங்கையர்கள் இலங்கைக்கு

கொரோனா வைரஸ் தொற்று காரணமான மாலைதீவில் சிக்கியிருந்த 170 இலங்கையர்கள் இன்று(29) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்திற்கே அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.