நாளை மறுநாள் தேர்தல் ஒத்திகை!

(ஜே.எப்.காமிலா பேகம்)
பொதுத்தேர்தல் ஒத்திகை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை தேர்தல் நடத்தப்படும்.

இதன்போது வாக்காளர்களை சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற பழக்குதல், சுகாதார முறைக்கு அமைய வாக்கு சாவடிகளை எப்படி முன்னெடுத்தல் உள்ளிட்ட ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளது