இன்று முதல் கட்டுநாயக்கவில் புதிய மாற்றம்: இலங்கை வருவோரின் கவனத்திற்கு !

(ஜே.எப்.காமிலா பேகம்)
நாட்டிற்கு வரும் அனைத்துப் பயணிகளும் இன்று தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் மேலும் பரவாமலிருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.