
(மண்டூர் ஷமி)
மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த ரவி ருக்ஸலா எனும் 24 வயதுடைய இளம் பெண் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சமையல் அடுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 29.05.2020 அன்று தீக்காயங்களுக்கு உட்பட்ட நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று 03.06.2020 குறித்த பெண் உயிரிழந்துளார். சடலத்தை பார்வையிட்ட காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேஷதாஸ் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.