பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 411 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கைதுசெய்யப்பட்டவர்களில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்தியருந்த சந்தேக நபர்கள் 200 பேர் உள்ளடங்குவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 90 பேரும், சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 88 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐஸ் மற்றும் கொடா போதைப்பொருளை வைத்திருந்த 18 பேரும் கைதானவர்களில் உள்ளடங்குவர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 125 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.