ஹெரோயின் போதைப்பொருலுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் கார் ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகையை கடத்திய போது பெல்லன்வில பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.