தேர்தல் நடாத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தளாய் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்துச் செல்வதை கருத்தில் கொள்ளாது தேர்தல் நடாத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தளாய் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று(31) நடைபெற்றது.

தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இருபதிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பௌத்த தேரர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு, தேர்தலை நிறுத்து, தனியார் பல்கலைக் கழகத்தினை சட்டமாக்குவதை நிறுத்து, சுதந்திரமான கல்வியும், சுகாதாரம், பெற்றுக்கொடு, மற்றும் சட்டவிரோத பட்டங்களை தடுத்து நிறுத்து போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தார்கள்.