புதிய நாடாளுமன்றம், அமைச்சரவை பதவியேற்பு திகதிகள் இதோ


பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் திகதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஓகஸ்ட் 11ஆம் திகதி இந்நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் பெரும்பாலும் ஓகஸ்ட் 07ஆம் திகதி இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அனைத்தும் நிறைவுசெய்ததன் பின் ஓகஸ்ட் 11ஆம் திகதி அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ததன் பின் ஓகஸ்ட் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.