காரைதீவு மாவட்ட வைத்திய அதிகாரியாக டாக்டர் அருந்திரன் நியமனம்


(சகா)
காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் மாவட்டவைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி டாக்டர் நடராஜா அருந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

காரைதீவை சேர்ந்த டாக்டர் ந.அருந்திரன் முன்னர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக 7 வருடங்கள் கடமையாற்றி 2018ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த இடமாற்றத்தின் கீழ் தற்போது காரைதீவுக்கு இடமாற்றம்பெற்று வந்துள்ளார்.

இதேவேளை காரைதீவு மாவட்டவைத்தியஅதிகாரியாகவிருந்த டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் இடமாற்றலாகி காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவரும் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

காரைதீவு பிரதேச சுகாதார வைத்தியஅதிகாரியாவிருந்த டாக்டர் றிஸ்னிமுத் கல்முனை தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை கல்முனை தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் எம்.எச்.றிஸ்பின் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் ஜே.மதன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.