அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்குமான அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்கள் தங்களுடைய ஓய்வு தினத்தை தவிர 6 நாட்கள் 24 மணித்தியாலயங்களும் தனது பிரிவிற்கு சேவையாற்ற கடமைப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனை (2020.10.01) திகதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 

அத்துடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் 4.15 வரையிலும், சனிக்கிழமை 12.30 வரையிலும் மக்கள் சேவைக்காக தங்களது அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.