சற்றுமுன்னர் நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

மினுவங்கொடையில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் இருவர் மினுவங்கொடை தொழிற்சாலையின் தொழிலாளர்கள் எனவும் மேலும் 11 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய மூவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நெருக்கமானவர்கள் என சந்தேகிப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.