பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா


(ரவிப்பிரியா)
பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா இம்மாதம் 17ந் திகதி (நாளை) சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளப்பண்ணி; ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் திருக்கதவு திறத்தல் இடம்பெறும்.

18ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலைப்பூசை மற்றும் மதியப் பூசையைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து வாழைக்காய் எழுந்தருளப் பண்ணல் இடம்பெற்று இரவுப் பூசையைத் தொடர்ந்து, அம்மன் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வருதல் இடம்பெறும்.

19ந் திகதி திங்கள் மூவேளைப் பூசையைத் தொடர்ந்து மாலை அம்பாள் ஊர்காவல் திரு உலா (சப்புறத் திருவிழா) நடைபெறும். 20ந் திகதி செவ்வாயன்று நோர்ப்பு நெல் எடுத்தலும், நெல் குற்றுதலும் முற்பகல் 11 மணிக்கும், சக்தி மகா யாகம் பிற்பகல் 3.30க்கும், விசேட சக்தி பூசையும், நோர்ப்பு கட்டுதலும் இடம்பெற்று. மாலை 5.00 மணிக்கு கடற்குளிப்பும், இரவு விசேட அபிஷேக பூசையும்; ஆராதனையும், தீ மூட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

21ந் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு தீ மிதிப்புடன் சம்பூரண பூசை நடைபெற்று விழா இனிது நிறைவுறும். 27ந் திகதி செவ்வாயன்று இரவு எட்டாம் நாள் சடங்கு நடைபெறும்.

ஆலய பிரதம பூசகர் விஸ்வபிரம்மஸ்ரீ த.தவராசா தலைமையில், ஆலய உதவிப் பூசகர்கள் விஸ்வபிரம்மஸ்ரீ ச.பிரகாசமூர்த்தி, விஸ்வபிரம்மஸ்ரீ சி.மேகராசா ஆகியோர் இணைந்து கிரியைகளை மேற்கொள்வர்.