கிழக்கு மாகாணத்திற்கும் பரவியது கொரோனா ! முழு விபரம்


கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு , திருகோணமலை, பொத்துவில், கல்முனை   போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் தற்போது 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய தகவல்களின் படி 

மட்டக்களப்பு (வாழைச்சேனை) - 11

 நிந்தவூர் -1

பொத்துவில் -5

கல்முனை - 3

திருகோணமலை - 6

எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன் இவர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின் பொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம்  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பிவந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

இன்னும் பலர் சமூகத்துள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அலட்சியமாகவிருந்தால் கிழக்கில் கொரோனாவைக்கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

சுகாதாரத்துறை மட்டும் இவ்விடயத்தில் கவனமெடுத்தால் போதும் என்று எண்ணவேண்டாம். எனவே தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்