கிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா ! அக்கரைப்பற்றில் ஊரடங்கு அமுல்கிழக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இருவரும், கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் 10 பேரும், சாய்ந்தமருது பகுதியில் ஒருவருமாக மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் அக்கரைப்பற்று பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவும்  அமல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்