கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் - 2021

கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்தில் 75 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.  

இலங்கையில் உள்ள எட்டு பல்கலைக்கழங்களில்  கற்கைநெறியினை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் இவர்களில் 17 மருத்துவத்துறை மாணவர்களும், பொறியியல்துறைக்கு 30 மாணவர்களும், சட்டத்துறைக்கு 18 மாணவர்களும், ஏனைய விசேட துறைகளுக்காக 10 மாணவர்களும் உள்ளடங்குகின்றார்கள். இவர்களில் தங்களது கல்வியை முடித்து மருத்துவத்துறை 03 மாணவர்கள், பொறியியல்துறை 09 மாணவர்கள், சட்டத்துறை 03 மாணவர்கள், ஏனைய விசேட துறை 04 மாணவர்களுமாக மொத்தமாக 19 மாணவர்கள் தங்களது கல்வியை பூர்த்தி செய்து வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வெருகல் ஈச்சிலம்பற்று கல்வி மேம்பாட்டுச்சபையினாலும், செட்டிபாளையம் சிவன் இல்லத்தினாலும்; நடைமுறைப்;படுத்தப்படுகின்றது. 

மனித இனத்திற்கு ஏற்பட்ட கொரோனா அனர்த்தத்தின் போதும் நன்கொடையாளர்கள் இப்புலமைப் பரிசில் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களை கைவிடவில்லை.  இவர்களுக்கான புலமைப் பரிசில் கூடியளவு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இதற்காக இந்நன்கொடையாளர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்க அவர்கள் இன்னும் ஆயத்தமாகவே உள்ளார்கள். இப்புலமைப் பரிசில் திட்டத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளுக்குத் தெரிவு செய்யப்படும்;  மாணவர்களை உள்வாங்கப்படுகின்றார்கள்.

இப் புலமைப் பரிசில் திட்டத்திற்கு நன்கொடையாளர்களாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் சிவகாமி பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி பரமேஸ்வரன், ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி நிர்மலன், டாக்டர்.திருமதி இராஜசுந்தரம், சிறிசக்தி பவுண்டேசன் அமைப்பின் டாக்டர்.திருமதி சிறிஸ்கந்தராஜா, திரு.திருமதி ரட்ணசிங்கம் ,  சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் திரு.திருமதி சுகுமார் ஆகியோர் நிதியுதவி அளித்துக் கொண்டு வருகின்றார்கள்.

புலமைப் பரிசில் கொடுப்பனவாக மருத்துவத் துறைக்கு மாதாந்தம் 8000.00 ரூபாவும், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு மாதாந்தம் 7000.00 வழங்கப்படுகின்றது. இத்தொகையானது அவர்களது கல்வி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை நன்கொடையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்கு இணைப்பாளர்களாக சங்காரவேல் அமைப்பினர் செயற்படுகின்றனர்.

இவ்வருடத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 25.01.2021 ஆந் திகதிக்கு முன்பாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவு புலமைப்பரிவில்களே வழங்கப்படுவதனால் பொருளாதார உதவி அதிகம் தேவைப்படுபவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவார்கள்.