மோட்டார் சைக்கிள் கடலில் வீழ்ந்து ஒருவர் பலி


நேற்றிரவு மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், வண்டி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, கடலுக்குள் விழுந்ததில்  உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் கற்கோவளத்தைச் சேர்ந்த பவிதரன் (30 வயது) என்பவரே உயிரிழந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் இடம்பெற்ற வீதியூடாகப் பயணித்தவர்கள் இன்று காலை பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.