பெண்ணொருவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ! இளம் குடும்பப்பெண் பலி


(ஷமி-மண்டூர்)

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடித்தீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ரதி சிறிக்காந் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பலியான சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து மட்டு நகரத்திற்கு தனது சகோதரியுடன் சென்று பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு தனது வீடு திரும்பிய நிலையில்; தனது வீட்டில் பாதுகாப்புக்காக வைத்திருந்த உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தான் யாரிடம் சொல்லாமல் எடுத்து தனது வீட்டிலிருந்து வீதியினூடாக குறித்த யுவதி தலைக்கவசம் இல்லாமல் ஓட்டிச்சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின்சார தூணில் மோதியதால் சம்பவ இடத்தில் படுகாயமடைந்து நாவக்காடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்