பாதசாரி கடவையில் முதியவர் மீது பொலிஸ் ஜீப் மோதியதில் முதியவர் பலி


பாதசாரி கடவையில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பொலிஸ் ஜீப் மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார்
மாத்தறை - திஹகொட - பண்டத்தர எனும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது

இவ்வாறு இறந்தவர் திஹகொட பாலோல்பிட்டிய பகுதியில் வசிக்கும் 75 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திஹகொட பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வண்டியில் சந்தேகநபர் ஒருவருடன் மாத்தறை மாஜிஸ்திரேட் முன் ஆஜராகப் போகும் வழியிலேயே பாதசாரி கடவையில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான நபரை சிகிச்சைக்காக மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜீப்பை ஓட்டி வந்த திஹகொட பொலிஸ் அதிகாரி மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.